சாய்பல்லவி: என்ன நடந்தாலும் அதைமட்டும் நான் செய்யமாட்டேன்! என்ன விஷயம் தெரியுமா?

சாய்பல்லவி: என்ன நடந்தாலும் அதைமட்டும் நான் செய்யமாட்டேன்! என்ன விஷயம் தெரியுமா?


sai-pallavi-says-why-she-is-not-using-makeup

மலையாளத்தில் ப்ரேமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றார் நடிகை சாய் பல்லவி. மலர் டீச்சர் என்ற அவரது கதாபாத்திரத்தின் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதனால் ஒரே படத்திலையே புகழின் உச்சிக்கு சென்றார் சாய் பல்லவி.

Sai pallavi

ப்ரேமம் படத்தை அடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் சாய்பல்லவி. தமிழில் நடிகர் தனுசுடன் மாறி 2 படத்தில் நாயகியான நடித்திருந்தார். இந்நிலையில் தான் மேக்கப்பை விரும்பாததற்கான காரணத்தை கூறியிருக்கிறார்  சாய் பல்லவி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிலளித்த நடிகை சாய் பல்லவி, ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும் ஒருவருடைய அழகு மாறிவிடாது என தெரிவித்துள்ளார்.

Sai pallavi

மேலும் தான் ஏன் படங்களில் மேக்கப் போடுவதில்லை என்றும் கூறியுள்ளார் சாய் பல்லவி. மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என்று எனக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள். அதன் காரணமாக தான் மேக்கப் போடாமல் நடிக்கிறேன். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.