சினிமா

சன் டீவியில் வருகிறது பிரமாண்ட சீரியல்! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

Summary:

Run serial in sun tv directing by selva

மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சிதான். கடந்த சில வருடங்களாக இந்த அளவில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது சன் தொலைக்காட்சி. சு தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான்.

முன்பெல்லாம் இல்லதரிசிகள் மட்டுமே பார்த்து வந்த சீரியலை தற்போது இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் என அனைத்துத்தரப்பு ரசிகர்கர்களும் பார்க்க தொடங்கிவிட்டனர். அதேபோல சன் நிறுவனமும் மக்களை ஈர்க்க நாளுக்கு நாள் புது புது வித்தியாசமானா தொடர்களை ஒளிபரப்புகிறது.

அந்தவகையில் பிரபல இயக்குனரை வைத்து புது சீரியல் ஒன்றை இயக்கவுள்ளது சன் நிறுவனம். அஜித் நடித்த அமராவதி, அரவிந்த்சாமி நடித்த வணங்காமுடி, படங்கள் உள்பட வெள்ளி திரையில் கிட்டத்தட்ட இவர் 27 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் இயக்குனர் செல்வா.

இந்நிலையில் சன்டிவியில் புதியதாக உருவாக இருக்கும் "ரன்" என்ற  மெகா தொடரை தான் இவர் இயக்கவுள்ளாராம் இயக்குனர் செல்வா. இந்த தொடரின் ஹீரோ தெய்வமகள் பிரகாஷ் என்றும், விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் ஹீரோயின் சரண்யா தான் கதாநாயகி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு ப்ரோமோ விடீயோவையும் சன் நிறுவனம் இதுவரை ஒளிபரப்பவில்லை. விரைவில் ஒளிபரப்பாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement