சித்தப்பு சரவணனை வெளியேற்ற இதுதான் காரணமா? பிரபல விஜய்பட இயக்குனர் போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்!!

சித்தப்பு சரவணனை வெளியேற்ற இதுதான் காரணமா? பிரபல விஜய்பட இயக்குனர் போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்!!


rperarasu-said-reason-of-leaving-saravanan-from-bigboss

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 6 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

பிற போட்டியாளர்கள் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினர். ஆனால் பிரபல நடிகர் சரவணன் ஒருசில காரணங்களுக்காக  பிக்பாசால் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 

perarasu

மேலும் தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் கூறியதால்தான்  அவர் வெளியேற்றப்பட்டார் எனவும், கடந்த வாரம் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கும்போது சரவணன் மிக மெதுவான குரலில் 'கோர்த்து விட்றாண்டா' என்று கூறியதால்தான் வெளியேற்றப்பட்டார் எனவும் பல காரணங்கள் பலதரப்பினரால் கூறப்பட்டு வருகிறது.

perarasu

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் பேரரசுவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர், கமல்ஹாசன் பெரிய லெஜண்ட், சரவணன் கமலைத்தான் அப்படி பேசினாரா என்பது தெரியாது. ஆனால் அது அங்க வேலை பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

அவ்வாறு சரவணன் ஒருமையில் கமலை பேசியிருந்தால் அந்த காரணத்தால் மட்டுமே அவர் வெளியேற்றப்பட்டிருப்பார். பேருந்தில் உரசினேன் என்பது காரணமில்லை. அப்படி இருந்தால்  அப்பொழுதே அவரை எலிமினேட் செய்யப்பட்டிருப்பார் என்று தெரிவித்துள்ளார்.