உச்சகட்ட உற்சாகத்தில் இருக்கும் ரோஜா குடும்பத்தார்கள்! என்ன விசேஷம் தெரியுமா? வைரலாகும் செம கியூட் புகைப்படங்கள்!roja-selvamani-celebrating-wedding-day

தமிழ் சினிமாவில் செம்பருத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, பிரபு, சத்யராஜ்,  சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த அவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அதனைத்தொடர்ந்து ஆந்திர அரசியலில் குதித்த அவர் தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்நிலையில் ரோஜா மற்றும் செல்வமணி தம்பதியினர் தங்களது 19 வது திருமண நாளை நேற்று அவர்களது  குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

மேலும் ரோஜா, செல்வமணி தம்பதியினரை நேரில் அழைத்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருவருக்கும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரோஜாவின் மகன் மற்றும் மகளும் உடனிருந்துள்ளனர். இத்தகைய  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.