ரோபோ ஷங்கர் மகளிடம், ரசிகர் கேட்ட மோசமான கேள்வி! மிக கூலாக பதிலளித்த பிகில் பாண்டியம்மா!Robo shankar daughter answered to fan question

தமிழ் சினிமாவில் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தற்போது பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவரது மகள்  இந்திரஜா. அவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் இந்திரஜா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் மற்றும் டிக்டாக் வீடியோக்களை நடத்தி, வித்தியாசமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

Robo shankar

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் இந்திராஜாவிடம் உங்கள் அப்பாவிற்கு காதலியாக நடிப்பீர்களா என எடக்கு மடக்காக கேள்வி எழுப்பியுள்ளார் இதற்கு சிறிதும் கோபப்படாமல் மிகவும் கூலாக, நிலைமை அப்படியென்றால் நான் பண்ணுவேன். நான் எங்க அப்பாவை  லவ் பண்றேன் அவ்ளோதான், சிம்பிள் ப்ரோ என பதிலளித்துள்ளார்.

Robo shankar