இப்படி ஏமாத்திட்டாரே! ரச்சிதா செய்த காரியத்தால் கண்ணீர் விட்டு அழுத ராபர்ட் மாஸ்டர்.! வைரலாகும் வீடியோ!!Robert master dance video viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இதில் 21 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டநிலையில் ஐந்து பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது 16  பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகின்றனர்

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ராஜ வம்சம் என்ற டாஸ்க் கொடுத்தபட்டுள்ளது. அதற்காக பிக்பாஸ் வீடு அரண்மனையாகவும் அருங்காட்சியமாகவும் மாறி உள்ளது. மேலும் இதில் ராணியான ரச்சிதாவிற்கும், ராஜ தளபதியான அசீமுக்கும் ரகசிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அனைத்து போட்டியாளர்களிடமும் பிக்பாஸ் அதனை தெரிவித்த நிலையில், ராஜாவான ராபர்ட் மாஸ்டர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக வருத்தப்பட்டுள்ளார். மேலும் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.