சினிமா

என் வாழ்க்கையில நான் செய்த மிகபெரிய தவறே இதுதான்.! வருத்தத்துடன் முதன்முதலாக மனம்திறந்த அழகு நடிகை!!

Summary:

revathi talk about her marriage life

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரேவதி. இவர் திரைத்துறையில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான மண்வாசனை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் . அதனை தொடர்ந்து அவர் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு என பல பிரபலங்களுடன் இணைந்து  ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் பெரும் பிரபலமாக வெற்றி நாயகியாக வலம்வந்த ரேவதி திடீரென 1986ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குறைய துவங்கியது. பின்னர சினிமாவை விட்டு முற்றிலும் விலகி தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

Related image

இந்தநிலையில் 2002ஆம் ஆண்டு கருது வேறுபாடு ஏற்பட்டு திருமண வாழ்க்கை கசந்தநிலையில் பத்து வருடங்கள் கழித்து விவாகரத்து ரேவதி சுரேஷ் மேனனை விவாகரத்து செய்தார். அதனை தொடர்ந்து ராஜ்கிரணுடன் இணைந்து ப பாண்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அவர் பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரேவதி கூறுகையில், நான் திருமணம் செய்ததுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகபெரிய தவறு. சிறுவயதிலேயே நான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து என் சினிமா வாழ்க்கையே வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.


 
 


Advertisement