ஆத்தாடி! இவரோடவா? விஜய் டிவி மாஸ் பிரபலத்துடன் இணைந்த பிக்பாஸ் ரேஷ்மா!! வைரலாகும் புகைப்படம்!!reshma-going-to-act-with-ramar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மிக விறுவிறுப்பாக நடைபெற்றநிலையில்  கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் புஷ்பா புருஷன் காமெடி நடிகை ரேஷ்மா. இவர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 மேலும் ரேஷ்மா சினிமா மட்டுமின்றி, வாணி ராணி, வம்சம் போன்ற பல பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ரேஷ்மா தனது வாழ்க்கையில் நடந்த பல கஷ்டங்களை குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. மேலும் அவர் அனைத்து போட்டியாளர்களிடமும் வெளிப்படையாக நடந்து வந்தார்.

Reshma

 இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மாவுக்கு பல வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளது. மேலும் அவர் தற்போது விஜய் டிவி புகழ் ராமருடன் இணைந்து புதிய காமெடி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதுகுறித்து ரேஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பல காமெடி ஜாம்பவான்கள் இணைந்துள்ளஇப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.