நான் உன் பொண்டாட்டியா?.. நீயாரடா என்னை பேச... அடுக்குமொழியில் பயில்வானையே அலறவிட்ட பிரபல நடிகை..!

நான் உன் பொண்டாட்டியா?.. நீயாரடா என்னை பேச... அடுக்குமொழியில் பயில்வானையே அலறவிட்ட பிரபல நடிகை..!


rekha-nair-and-bayilvan-fight

இரவின் நிழல் படத்தை பார்த்து ரேகா நாயரை பயில்வான் விமர்ச்சித்ததால், அவர் உடற்பயிற்சி செய்யும்போது ரேகா நாயர் நேரில் சென்று அடுக்குமொழியில் வெளுத்துவாங்கியுள்ளார். 

இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் இரவின் நிழல். இப்படத்தை அகிரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் பார்த்திபன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரிகிடா என்ற அறிமுக நாயகி நடித்துள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் வித்தியாசமான முறையில், ஒரே சாட்டில் வெவ்வேறு காலகட்டத்தில் கதை நடப்பது போல் காட்சிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ரேகா நாயர் மற்றும் வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளிவந்த இரவின் நிழல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் ரேகா நாயர் மற்றும் பிரிகிடா இருவரும் அரை நிர்வாணமாக நடித்த நிலையில், விமர்சனங்கள் இருந்தாலும் அவர்களது முயற்சிக்கு பாராட்டு கிடைத்தது.

rekha nayar

ஆனால், அவதூறு கருத்துக்களை பரப்புவதாக குற்றம் சாட்டப்படும் பயில்வான் ரெங்கநாதன் இது குறித்து அவரது பாணியில் காரசாரமான விமர்சனங்களை கூறியுள்ளார். இதனால் கடுப்பான ரேகாநாயர், பயில்வான் காலையில் சென்னை-திருவான்மியூர் கடற்கரை அருகே உடற்பயிற்சி மேற்கொண்டபோது அவரை மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது "நான் அரை நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன?, அவுத்து போட்டு நடிச்சா உனக்கென்ன? என் இஷ்டம். நான் என்ன உன் பொண்டாட்டியா?, இல்ல பொண்ணா?, என்ன பேச உனக்கு என்ன தைரியம் இருக்கு? என நடுரோட்டில் வெளுத்து வாங்கியுள்ளார். இதனைக் கேட்டு பதில் கூற முடியாமல் பயில்வான் திக்குமுக்காடி நின்றார். அதனை பலரும் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதால் தற்போது அது தீயாக பரவி வருகிறது.