மீண்டும் பெரிய திரையில் நடிகை சினேகா இந்த முறை யாருக்கு ஜோடி தெரியுமா?



reendry heroein sneka - actor danush - new movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். இந்த முறை நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் தனுஷை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிய திரைப்படம் புதுப்பேட்டை. தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் சினேகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



 

இந்நிலையில் நடிகர் தனுஷ், இயக்குநர் துரை செந்தில் குமாருடன் மீண்டும் இணையவுள்ளார். ‘கொடி படத்தை அடுத்து மீண்டும் இவருடன் இணைகிறார். இதிலும் ‘கொடி போலவே தனுஷ் இரு வேடங்களில் நடிக்கிறாராம். இந்தப் படத்தில் அப்பா, மகன் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளார்.