10 வருஷமாச்சு.! செம ஹேப்பியாக கொண்டாட்டத்தில் ரீமா சென்! வைரலாகும் அரிய கியூட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற மின்னலே படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரீமா சென். முதல் படத்திலேயே பெருமளவில் பிரபலமான அவர் அதனை தொடர்ந்து விஜய், மாதவன், விக்ரம், விஷால், கார்த்தி என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவரது நடிப்பு அனைவரிடமும் வரவேற்பை பெற்று அவர் பலரிடமும் பாராட்டை பெற்றார்.
ரீமா சென் தமிழ் மட்டுமின்றி பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ருத்ரவீர் சிங் என்ற மகன் உள்ளார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரீமா சென் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் அவர் அண்மையில் தனது 10வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு ரீமா சென் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.