சினிமா

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை ரீமாசென்! புகைப்படம் இதோ!

Summary:

Reema sen latest photo goes viral

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென். கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.

அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பின்னர் செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2012ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

சமீப காலமாக இவர் எப்படி உள்ளார், என்ன செய்கிறார் என்று எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை மாளவிகாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக, ஆள் அடையாளமே தெறியாமல் மாறியுள்ளார் ரீமாசென். இதோ அந்த புகைப்படம்.


Advertisement