சினிமா

ரெட் படத்தின் ஒல்லிக்குச்சி உடம்புகாரி நாயகியின் தற்போதைய நிலையைப் பார்த்தீர்களா!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

Summary:

Red movie actress latest photo viral

தமிழ் சினிமாவில் அஜித்துக்கு ஜோடியாக ரெட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியா கில். இவர் 1996 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த தேரே மேரே சப்னே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

 மேலும் இவர் அஜித் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பெருமளவில் வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரெட்  திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறாத நிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஒல்லிக்குச்சி உடம்புகாரி என்ற பாடலின் மூலம் அவர் பிரபலமானார்.

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி இந்தி,  தெலுங்கு, மலையாளம் சினிமாக்களிலும்  ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபலமான மாடல் என்பதால் தற்போதும் அவர் தனது மாடலிங் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தற்போது 40 வயதாகும் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 


Advertisement