என்னது.. சியான் 60 படத்திலிருந்து திடீரென அனிருத் விலக இதுதான் காரணமா? வெளியான தகவல்!!

என்னது.. சியான் 60 படத்திலிருந்து திடீரென அனிருத் விலக இதுதான் காரணமா? வெளியான தகவல்!!



reason-for-anirudh-releaving-from-chiyaan-60-movie

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். அவரது கைவசம் தற்போது கோப்ரா, துருவநட்சத்திரம், பொன்னியின் செல்வன் என பல படங்கள் உள்ளது. அதை தொடர்ந்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ்வுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. இத்திரைப்படத்தில் வாணி போஜன் மற்றும் நடிகை சிம்ரன் ஆகியோர் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர். 

கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். சியான் 60 படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அதிலிருந்து அவர் விலகிய நிலையில்  சந்தோஷ் நாராயணன் அப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

chiyaan 60

இந்நிலையில் சியான் 60 படத்திலிருந்து அனிருத் விலகியதற்கு என்ன காரணம் என்ன என பலரும் கேள்வியெழுப்பிய நிலையில் தற்போது, அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில் செம பிஸியாக இருந்ததால் சியான் 60 படத்தில் அவரால் பணிபுரிய முடியவில்லை. அதனாலேயே அவர் விலகியதாக தகவல்கள் பரவி வருகிறது.