மறுபடியும் அங்கு எப்போ போவேன்னு ரொம்ப ஆவலாக இருக்கு! ஏக்கத்துடன் பகிர்ந்த நடிகை ராஷ்மிகா!rashmika-like-to-get-back-to-cinema-shooting

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம்  என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

ரஷ்மிகா தமிழில் நேரடியாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும் அவருக்கென ஏகப்பட்டட தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அறிமுகமாக உள்ளார்.

rashmika

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் டுவிட்டர் லைவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் சினிமா குறித்து கூறுகையில், ஒவ்வொரு நாளும் கேமராவிற்கு முன் நிற்பது தேர்வு எழுதுவதற்கு சமம். 

அது சிரமமாக இருந்தாலும் ஒரு த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுக்கும். ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அங்கிருக்கும் அனைவரும் கைதட்டி பாராட்டும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பவும் எப்போது வேலைக்கு செல்வேன் என ஆவலாக உள்ளது என ஏக்கத்துடன் கூறியுள்ளார்.