தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையும் பிரபல ஹிட் ஜோடி.. யார் தெரியுமா?



Rashmika and vijay devara konda act in next movie

2011ம் ஆண்டு "நுவ்விலா" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், இதுவரை 17 படங்களில் நடித்துள்ளார். 2017ம் ஆண்டு இவர் நடித்த "அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதை வென்றுள்ளார். 

rashmika

மேலும் இவர் நடித்த நோட்டா மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்கள் தமிழிலும் வெளியாகியுள்ளன. இதே போல் 2016ம் ஆண்டு "க்ரிக் பார்ட்டி" என்ற கன்னடத் திரைப்படம் மூலம் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. 2021ம் ஆண்டு தமிழில் "சுல்தான்" படத்தில் அறிமுகமானார்.

மேலும் இவர் தொடர்ந்து தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி இணைந்து டியர் காம்ரேட் மற்றும் கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

rashmika

இந்நிலையில், சித்தாரா என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் கெளதம் தின்னூரி இயக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்க இருந்த ஸ்ரீலீலா வெளியேறியதால், அவருக்கு பதிலாக தற்போது ராஷ்மிகா மந்தனா  மூன்றாவது முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைகிறார்.