முதன்முதலாக தனது மனைவியோடு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொகுப்பாளர் ரக்ஷன்! செம கியூட்டா இருக்காங்கல!!rakshan-with-his-wife-photo-viral

பிரபல  தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர் விஜே ரக்சன். அவர் தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை  அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவையாக தொகுத்து வழங்கி வருகிறார். 

ரக்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இரண்டாம் நாயகனாக நடித்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

 பிரபல நடிகர் மற்றும் தொகுப்பாளராக வலம்வந்த ரக்சன் திருமணமாகாதவர் என பலரும் நினைத்திருந்தனர். இந்த நிலையில் தனக்கு திருமணமானது குறித்து அவர் முதன்முதலாக சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். மேலும் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ரக்சன் தனது மனைவியுடன் முதன்முதலாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

Rakshan

அதாவது அவன் அண்மையில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.