சினிமா

புது மருமகனுடன் செல்பி எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த்! வைரல் புகைப்படம்!

Summary:

Rajinikanth selfie with son in law and daughter

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சவுந்தர்யா ஏற்கனவே அஸ்வின் என்பவருடன் திருமணம் முடிந்து பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த கையோடு விசாகன் மற்றும் சவுந்தர்யா இருவரும் தேனிலவு சென்று புகைப்படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று மும்பையில் கோலாகலமாக நடந்த அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண வரவேற்பில் ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் மூவரும் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் கலந்துகொண்ட மூவரும் முதன் முறையாக செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை சவுந்தர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.  


Advertisement