தலைவரு டாப்புதான்.! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொடுக்கபட்ட அந்த விருது! கொண்டாடும் ரசிகர்கள்!!

தலைவரு டாப்புதான்.! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொடுக்கபட்ட அந்த விருது! கொண்டாடும் ரசிகர்கள்!!


rajinikanth-got-lot-tax-paying-award

நாடு முழுவதும் நேற்று வருமான வரி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிக வருமான வரி செலுத்துபவர்கள், தவறாமல் வரி செலுத்துபவர்கள் பராட்டபட்டு பெருமைப்படுத்தப் பட்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் தமிழ்நாட்டில் அதிக வருமான வரி செலுத்தி வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு விருது அறிவிக்கப்பட்டு பெருமைபடுத்தப் பட்டார். அந்த விருதினை நடிகர் ரஜினி சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த விழாவில் தவறாமல் வருமான வரி செலுத்துபவர்களும் பாரட்டப்பட்டனர்.

ரஜினிகாந்த்திற்கு விருது வழங்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதற்காக அவருக்கு 150 கோடி சம்பளம் வழங்கபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.