லிவிங்ஸ்டன் மனைவி மருத்துவ செலவுக்கு ரூ.15 இலட்சம் கொடுத்த ரஜினிகாந்த்; நெகிழ்ச்சி தகவல்.!rajinikanth-give-rs-15-lakh-amount-for-livingston-wife

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விதார்த் உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் லால் ஸலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. 

படத்தில் நடிகர் லிவிங்ஸ்டனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 90 களில் முன்னணி நடிகராக வலம்வந்த லிவிங்ஸ்டன், தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 

இவரின் மனைவி ஜெஜிந்தா. தம்பதிகளுக்கு ஜோவிடா, ஜம்மா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில், ஜெஜிந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை. 

இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, மருத்துவ செலவுக்கு இலட்சக்கணக்கில் பணம் செலவாகும் அல்லது ஒரு மாதத்தில் உயிரிழந்துவிடுவார் என்ற நிலை வந்துள்ளது. 

வருந்திப்போன லிவிங்ஸ்டன் குடும்பம் தொடர்ந்து சோகத்தில் இருக்க, நடிகர் ரஜினிகாந்துக்கு இவ்விசயம் தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு தலத்தில் ரஜினிகாந்த் லிவிங்ஸ்டனை அழைத்து இதுகுறித்து கேட்டறிந்து ரூ.15 இலட்சம் பணம் கொடுத்து உதவி இருக்கிறார். 

இந்த தகவலை நடிகர் லிவிங்ஸ்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர வைரலாகி வருகிறது.