ஸ்டைலில் தாத்தா ரஜினி, நடிப்பில் அப்பா தனுஷை மிஞ்சிவிடுவாரோ யாத்ரா; வைரலாகும் புகைப்படம்.!
ஸ்டைலில் தாத்தா ரஜினி, நடிப்பில் அப்பா தனுஷை மிஞ்சிவிடுவாரோ யாத்ரா; வைரலாகும் புகைப்படம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து பிரிந்தார்.
இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமண செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சமீபத்தில் சௌந்தர்யா மற்றும் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷின் மூத்த மகன் யாத்ராவின் போட்டோ ரசிகர்களை கவர்ந்தது. சில ரஜினி ரசிகர்கள், யாத்ராவின் இந்த ஸ்டைலான போட்டோவுக்கு மரணம் மாஸ் பாடலை பயன்படுத்தியுள்ளனர். தவிர, யாத்ராவின் போட்டோவை ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.
அதே நேரம் தனுஷ் ரசிகர்கள் யாத்ராவை தனுஷ் உடன் ஒப்பிட்டு பாராட்டிக் வருகின்றனர். யாத்ரா ஸ்டைலாக உள்ளதாகவும் தாத்தா, தந்தை போலவே ஹீரோவாக வருவார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.