அடேங்கப்பா என்னவொரு போஸ்.! தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில், மனைவியுடன் கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்!! புகைப்படம் இதோ..

rajini wife visit in tharbar shooting spot


rajini-wife-visit-in-tharbar-shooting-spot

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த்  AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். மேலும் அப்படத்தில் அவர் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். 

இந்நிலையில் இதன் பட பிடிப்பு வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.மேலும் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற படப்பிடிப்பு காட்சிகள் அடிக்கடி இணையத்தில் கசிந்து வருகிறது.

Tharbar

இவ்வாறு படப்பிடிப்பு பரப்பரப்பாக நடந்துவந்த நிலையில், சமீபத்தில் தர்பார் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு ரஜினியின் மனைவி லதா சென்று சந்தித்துள்ளார். அங்கு போலீஸ் உடையில் இருக்கும் ரஜினியை லதா சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tharbar