தமிழகம் சினிமா

ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டார்' ஆனது எப்படி.? ரஜினி கடந்துவந்த பாதை.!

Summary:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று (12-12-2020) கொண்டாடுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை இன்று (12-12-2020) கொண்டாடுகிறார். கோடிக்கணக்கான ரசிகர்களை தனது தனித்துவமான ஸ்டைலால், கவர்ந்து அவர்களது மனதில் குடி கொண்டிருக்கும் ரஜினியின் திரையுலக பயணம் வியக்கத்தக்கது.

பெங்களூரில் பஸ் கண்டக்டராக பணியாற்றியபோது ஸ்டைலாக உடை அணிந்து, பலரையும் கவரும் அளவிற்கு கூட்டநெரிசலில் ரஜினி ஸ்டைலாக டிக்கெட் கிழிக்கும் ஸ்டைல் பலரையும் கவர்ந்துள்ளது. இயக்குனர் கே பாலசந்தர் திரைப்படத்தில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தை துவங்கினார்.

இதனையடுத்து கே பாலசந்தர் ரஜினியை மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு உள்பட 3 படங்களில் நடிக்க வைத்தார். மூன்று முடிச்சு திரைப்படத்தில் ரஜினி சிகரெட்டை தூக்கிப்போட்டு புகை பிடித்த ஸ்டைல் பலரையும் வியக்கவைத்தது. ஆனாலும் புகைப்பழக்கத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சுட்டிக்காட்டி, ரசிகர்களை புகைபிடிக்க வேண்டாம் என பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினிகாந்த். ரஜினிக்கு  71 வயது ஆனாலும் தற்போதுவரை சினிமா பயணத்தை நிறுத்தாமல் இளம் நாயகனாகவே நடித்து வருகிறார்.

இதனையடுத்து ரஜினிகாந்த் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். "பைரவி" திரைப்படத்தில் அவருக்கென ஏராளமான ரசிகர் கூட்டம் கூடியது. பைரவி திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட கலைப்புலி தாணு ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என தலைப்பிட்டு விளம்பரம் செய்தார். அதுவே பின்னர் மைல்கல்லாக நிலைத்துப் போனது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எஜமான், பாட்ஷா, முத்து, அருணாச்சலம் படையப்பா, ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் உள்ள குக்கிராமங்களில் உள்ள மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றார் ரஜினிகாந்த். இதனையடுத்து அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் தமிழில் முதலில் நடித்த நடிகர் என்ற சிறப்பைப் ரஜினிகாந்த், கோச்சடையான் திரைப்படம் மூலம் பெற்றார்.


Advertisement