விஜய் டிவியின் பிரபலமான சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்!! மாப்பிள்ளை யார் தெரியுமா?

விஜய் டிவியின் பிரபலமான சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்!! மாப்பிள்ளை யார் தெரியுமா?



rajarani serial actress shpnam marriage

பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தெய்வமகள் மற்றும் ராஜா ராணி ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷப்னம். இவருக்கு கடந்த இரு வருடங்களுக்கு  முன்பு, தான் காதலித்து வந்த தனது தூரத்து உறவினரான ஆரியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு பிப்ரவரி 14, 2018 ஆம் ஆண்டு திருமணம்நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  ஆனால் நடிகை சப்னா தொடர்ந்து சீரியல்களில் நடிக்க வேண்டியது இருந்ததை தொடர்ந்து அவர்களது திருமணம் குறிப்பிட்ட தேதியில் நடைபெறவில்லை.

shabnam

 இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என பல வதந்திகள் பரவியது. இந்நிலையில் தற்பொழுது ஷப்னம் மற்றும் ஆரியனுக்கு அவர்களது சொந்த ஊரில் செப்டம்பர் 7ல் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் சென்னையிலுள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் செப்டம்பர் 8ம் தேதி திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் நடிகை ஷப்னத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.