நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலிக்க காரணமே இதுதான்.! என்ன ராகுல் தாத்தா இப்படி சொல்லிட்டாரே.! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. அவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.
அதனைத் தொடர்ந்து பயங்கர ரொமான்டிக் காதல் ஜோடியாக வலம் வந்த இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். நானும் ரவுடிதான் படத்தில் ராகுல் தாத்தாவும் நடித்து இருந்தார். இவரது உண்மையான பெயர் உதயபானு. இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். மேலும் விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவடைந்த குக் வித் கோமாளி சீசன் 3யிலும் அவர் போட்டியாளராக பங்கேற்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ராகுல் தாத்தா, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராகிடையே காதல் ஏற்பட காரணமே நான்தான் என கூறி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் நான் விக்னேஷ் சிவனிடம் சென்று நீங்கள் பார்ப்பதற்கு பிரபுதேவா மாதிரியே இருக்கிறீர்கள் என்று சொல்வேன். பின் நயன்தாராவிடம் விக்னேஷ் பிரபுதேவா மாதிரி இருக்கிறார்தானே என கேட்டேன். அதன் பிறகுதான் இருவருக்குமிடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என கூறியுள்ளார்.
நயன்தாரா இதற்கு முன்பு சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.