நடிகை ராதிகாவிற்கு கொரோனா இல்லையா? இதுதான் பிரச்சினையா? செம ஸ்ட்ராங்கா அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

நடிகை ராதிகாவிற்கு கொரோனா இல்லையா? இதுதான் பிரச்சினையா? செம ஸ்ட்ராங்கா அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!


radhika-explain-about-jail-punishment-and-corono

கடந்த 2014ஆம் ஆண்டு ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃப்ரேம்ஸ் என்ற நிறுவனம் இது என்ன மாயம் என்ற படத்தைத் தயாரிப்பதற்காக ரேடியண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து  ஒன்றரைக் கோடி ரூபாயை கடனாகப் பெற்றது. பின்னர் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கால தாமதம் செய்துள்ளது. மேலும் அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பியது.

இந்தநிலையில் ரேடியண்ட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி தான் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், அதுவரையில் தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்தது. இதற்கிடையில் நடிகை ராதிகா சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது.

மேலும் ரசிகர்களும் அக்கறையுடன் பிரார்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இது குறித்து நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவரின் அன்பிற்கும் நன்றி, நான் கொரோனாவால் பாதிப்படையவில்லை.  இரண்டாவது தடுப்பூசி செலுத்திய பிறகு உடல் வலி ஏற்பட்டது. ஊடகங்களில் என் உடல்நிலை மற்றும் வழக்கு பற்றி கண்ட படியான தகவல்கள் வெளிவருகின்றன. வழக்கை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றத்தில் போராடுவோம். நான் பணிக்கு திரும்பிவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.