மேடையில் வைத்து காதலியை முத்தமிட்ட விஷால்.. திருமணம் எப்போ தெரியுமா?.!
புஷ்பா 2 படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போடுவது சமந்தா இல்லையாம்!! இந்த பிரபல பாலிவுட் நடிகையாம்!! யாருனு பார்த்தீங்களா..

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் செம்மர கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் புஷ்பா. புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற அப்படத்தில் அமைந்துள்ள பாடல்களும் ஒரு முக்கிய காரணம்.
இந்த படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு ஆடிய கவர்ச்சியாட்டம் சென்சேஷனல் ஹிட்டானது. புஷ்பா படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
மேலும் இந்த புஷ்பா - தி ரூல் படத்திலும் ஒரு குத்துப்பாடல் ஒன்று உள்ளதாம். ஆனால், இந்த படத்தின் குத்துப்பாடலுக்கு சமந்தா நடனம் ஆடவில்லை. அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியிடம் இந்த பாடலுக்கு நடனம் ஆட படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.