சினிமா

தான் இறந்த பிறகும் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழவைத்த நடிகர் புனித் ராஜ்குமார்.!! என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!

Summary:

தான் இறந்த பிறகும் ஒட்டுமொத்த மக்களையும் நெகிழவைத்த நடிகர் புனித் ராஜ்குமார்.!! என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வந்த நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமாருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் குவிந்தனர். இந்தநிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த புனித் ராஜ்குமார் தனது சொந்த செலவில் பள்ளிகளை நடத்தி ஏழை, எளிய குழந்தைகளுக்கு உதவி வந்துள்ளார். இந்தநிலையில் தற்போது அவர் இறந்த பின்னரும் அவர் செய்த புனிதமான செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புனித் ராஜ்குமார் தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். அவரது கண்கள் பெங்களூரூவில் உள்ள நாராயண நேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டது. புனித் ராஜ்குமாரின் தந்தை நடிகர் ராஜ்குமாரும் அவரது கண்களை தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement