நீங்கதான் எனக்கு மகனாய் பொறக்கணும் மாமா.! மறைந்த விஜய் டிவி பிரபலத்தை எண்ணி புகழ் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

நீங்கதான் எனக்கு மகனாய் பொறக்கணும் மாமா.! மறைந்த விஜய் டிவி பிரபலத்தை எண்ணி புகழ் வெளியிட்ட உருக்கமான பதிவு!!


pugazh-post-about-vadivelu-balaji-and-his-wedding-day

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி மக்களை கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர்  புகழ். அதனை தொடர்ந்து அவருக்கு  படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அஜித், சூர்யா, சந்தானம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.

 மேலும் zoo keeper என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். புகழ் பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறினர். புகழின் துவக்க காலத்தில் அவருக்கு துணையாக இருந்தவர் வடிவேல் பாலாஜி. புகழ் அவரை மாமா என செல்லமாக அழைப்பார்.

இன்று மறைந்த வடிவேல் பாலாஜியின் திருமண நாள். அதனை முன்னிட்டு புகழ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் மாமா... உங்கள் திருமண நாளன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன்.

உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்புறேன். எப்பவும் என் கூடத்தான் இருப்பீங்க.. கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்தக் கடவுளை வேண்டிக்கிறேன் மாமா! என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.