அட.. நம்ம குக் வித் கோமாளிக்கு இத்தனை திருமணமா?? அவர் சொன்ன விளக்கத்தை பார்த்தீங்களா!! வாழ்த்தும் ரசிகர்கள்!!

அட.. நம்ம குக் வித் கோமாளிக்கு இத்தனை திருமணமா?? அவர் சொன்ன விளக்கத்தை பார்த்தீங்களா!! வாழ்த்தும் ரசிகர்கள்!!


pugazh-done-his-marriage-with-pensi-3-times

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் பிரபலமாவதற்கு முன்பே பென்சியா என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அவரை கோவிலில் தாலி கட்டி எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார்.

 அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர். ஆனால் ஒரு வருடத்திற்கு முன்னரே பெரியார் பதிப்பகத்தில் புகழ் மற்றும் பென்சியாவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது இரண்டாவது முறையாக நடைபெற்ற திருமணம்.

பென்சியா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராம். அதனால் அவரது குடும்பத்தினரின் சந்தோசத்திற்காக புகழ் மற்றும் பென்சி மூன்றாவது முறையாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து புகழ் வெளியிட்ட பதிவில், 
என் தந்தை அன்பிற்கு ஒரு முறை…
என் தாய் அன்பிற்கு ஒரு முறை..
என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை…
வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால் 
மேலும் ஒரு முறை தயார் .
இந்தியனாக இருக்கிறேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே என தெரிவித்துள்ளார்.