
இலங்கையில் விஜய் வாங்கிய சொத்துக்களை சிங்கள முதலாளிகள் அபகரிக்க முயல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் விஜய். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் நடிகர் விஜய் அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா. அவரை விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டார். லண்டனில் செட்டிலான சங்கீதா ஈழத்தமிழர் ஆவார்.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் அறிவுரையின்படி அவரது உறவினர்கள் பெயரில் நடிகர் விஜய் இலங்கை கொழும்பில் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார் எனவும், அத்தகைய சொத்துக்களை சிங்கள முதலாளிகள் சிலர் கைப்பற்ற முயல்வதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது. இதுகுறித்து விஜய் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement