சினிமா

பிக்பாஸ் முடிந்த மறுநாளே பிரியங்கா செய்த வேலையை பார்த்தீங்களா! அட.. கூட இவங்கெல்லாம் இருக்காங்களா.! புகைப்படம் இதோ!!

Summary:

பிக்பாஸ் முடிந்த மறுநாளே பிரியங்கா செய்த வேலையை பார்த்தீங்களா! அட.. கூட இவங்கெல்லாம் இருக்காங்களா.! புகைப்படம் இதோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 மிகவும் விறுவிறுப்பாகவும், சண்டை, மோதல் என சுவாரசியமாகவும் சென்ற நிலையில் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. இதில் பாவனி, பிரியங்கா, அமீர், ராஜு, நிருப் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், ராஜு பிக்பாஸ் டைட்டிலை வென்றார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் தங்களது சக போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே துவக்கத்தில் நெருங்கிய நண்பர்களாகவும், பின்னர் நாட்கள் செல்லச் செல்ல தங்களது பயங்கரமான சண்டைகளால் அனைவரையும் மிரள வைத்தவர்கள் பிரியங்கா மற்றும் நிரூப்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே பிரியங்கா, நிரூப், அபிஷேக், அபினய் அனைவரும் ஒன்றாக ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் உள்ளே சண்டை, வெளியில் வந்ததும் நட்பா?? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.


Advertisement