அனைவருக்கும் ஆகஸ்ட் 10 தேதி விடுமுறை! ஜெயிலர் டிக்கெட் இலவசம்! மாஸ் காட்டும் நிறுவனம்!!

அனைவருக்கும் ஆகஸ்ட் 10 தேதி விடுமுறை! ஜெயிலர் டிக்கெட் இலவசம்! மாஸ் காட்டும் நிறுவனம்!!



Private company announced leave for Jailor Movie

ஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஜெய்லர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. சமூக வலைத்தளங்களை திறந்தாலே 'கவாளா" பாட்டு தான் ஹிட்.

இந்த நிலையில் பெங்களூரில் இயங்கி வரும் எட்டு கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாக இருப்பதால் ஆகஸ்ட் பத்தாம் தேதி விடுமுறை அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில் ஜெய்லர் படம் தற்போது வெளியாக இருக்கிறது. இதனால் தங்களிடம் வேலை செய்யும் ஆட்கள் லீவ் லெட்டரை குவித்து விடுவார்கள். இதனால் எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் வியப்பூட்டும் வகையாக அவர்களது எட்டு கிளைகளிலும் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஜெய்லர் திரைப்படத்தின் டிக்கெட்களை இலவசமாக வழங்கியுள்ளனர். 

"எங்கள் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.