சினிமா

அடேங்கப்பா! ஓட்டு போட விஜய் ஓட்டி வந்த சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

Summary:

இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்

இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாக்களித்துள்ளனர். அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதிலும் விஜய் வீட்டில் இருந்து சைக்கிள் ஓட்டி வந்து வாக்களித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் டிரெண்டானது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் வாக்களிப்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே வாக்குச்சாவடி இருப்பதாலும், அப்பகுதியில் கார் நிறுத்த இடமில்லை என்பதாலும் விஜய் சைக்கிளில் சென்றதாகவும் காரணம் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் ஓட்டி சென்றார் என்பதற்காகவே அந்த சைக்கிள் குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த சைக்கிள் 2019ஆம் ஆண்டு மான்ட்ரா நிறுவனம் வெளியிட்ட பிரபலமான மெட்டல் மாடல். 16 கிலோ எடை கொண்ட இந்த சைக்கிள் 24 ஸ்பீடு கியர் அமைப்பு கொண்டதாம். மேலும் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள், எக்ஸ்எம்ஆர் அலாய் ஹேண்டில்பார் கொண்டது. மேலும் இதன் விலை 22,500 என தகவல்கள் பரவி வருகிறது.


Advertisement