சினிமா

நடிகர் பிரேமுக்கு இவ்வளவு பெரிய மகன்களா! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Pream family photo

தமிழில் 2003 ஆம் ஆண்டில் பாரதிராஜாவின் 'ஈரா நிலம்' படத்தில் ஹீரோவின் சகோதரராக அறிமுகமானவர் நடிகர் பிரேம். பின்னர் அவர் சீரியல்களுக்கு மாறினார். அதனை தொடர்ந்து இரு திரைகளிலும் கலக்கி வருகிறார்.

இவரின் நடிப்பை பார்த்து கலைஞர் கருணாநிதி அவரின் கண்ணம்மா படத்தில் இவருக்கு வாய்ப்பு அளித்தார். பின்னர் அந்த படம் வெளியான பிறகு கலைஞரின் பாராட்டை பெற்றார். அந்த அளவிற்கு எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் நடிக்க கூடிய சிறந்த நடிகர்.

இவர் தமிழ் மட்டுமின்றி கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா, சிவப்பு மஞ்சல் பச்சை, உன்னை போல் ஒருவன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்களா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு காரணம் இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் நடைப்பெற்றது தான் காரணம். 


Advertisement