மகன் முன்பு மீண்டும் திருமணம் செய்துகொண்ட பிரகாஷ்ராஜ்! அவரது மனைவி மற்றும் மகனை பார்த்துருக்கீங்களா! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த டூயட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் ம


prakashraj wedding day celebration photo viral

தமிழ் சினிமாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த டூயட் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். அதனைத் தொடர்ந்து தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். நடிகர் பிரகாஷ்ராஜ். ஹீரோ, மிரட்டலான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என அசத்தி வரும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகை லலிதா குமாரியை கடந்த 1994 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பரஸ்பர ஒப்புதல் அடிப்படையில் இருவரும் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் 2010 ஆம் ஆண்டு போனி வர்மாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் அண்மையில் தங்களது 11வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரகாஷ்ராஜ், இன்றிரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். என் மகன் வேதாந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் மீண்டும் திருமணம் நடைபெற்றது என பகிர்ந்துள்ளார்.