சினிமா

எங்காவது நயன்தாராவை பார்த்தால் இதை கண்டிப்பாக செய்வேன்..! கடும் கோபத்தில் பிரபுதேவா மனைவி.!

Summary:

Prabudeva wife heavy anger to Nayanthara

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை தொடர்ந்து இவர் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார்.

நயன்தாரா முதலில் நடிகர் சிம்புவுடன் நடிக்கும் போது காதல் ஏற்ப்பட்ட இருவரும் சில காலம் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதை அடுத்து பிரிந்து விட்டனர். அதன்பிறகு வில்லு படத்தில் விஜயுடன் நடிக்கும் போது இயக்குனரும், நடிகருமான பிரபு தேவாவை காதலித்து வந்துள்ளார்.

ஆனால் பிரபு தேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருந்து நயன்தாராவை காதலித்து வந்துள்ளார். சில காலங்கள் காதலித்து வந்த நயன்தாரா, பிரபுதேவா ஜோடி அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். அதற்காக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். 

ஆனால் திடீரென நயன்தாரா, பிரபுதேவா ஜோடி பிரிந்து விட்டனர். அதனால் சில காலம் நடிப்பை விட்டு விலகி இருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க துவங்கினார். நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டு தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பிரபுதேவாவின் முன்னாள் மனைவி ரமலத் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார். அதில் நயன்தாரா என் கணவரை திருடி விட்டார். மற்றவர்கள் கணவரை திருடுபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். நான் எங்காவது நயன்தாராவை பார்த்தால் உதைப்பேன் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார். 


Advertisement