கணவர் மீது பாலியல் புகாரளித்து சர்ச்சை! சில நாட்களிலேயே சமாதானமாகி மீண்டும் ஜோடிசேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை!

கணவர் மீது பாலியல் புகாரளித்து சர்ச்சை! சில நாட்களிலேயே சமாதானமாகி மீண்டும் ஜோடிசேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை!


poonam-pandey-join-with-husband-after-some-controversy

ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்து பிரபலமானார்.

மேலும் சர்ச்சைகளுக்கு பெயர்போன அவருக்கு கடந்த செப்டம்பர் 10-ந் தேதி விளம்பரப் படங்களை இயக்கி, தயாரிக்கும் சாம் பாம்பே என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தனது திருமண புகைப்படத்தை வெளியிட்ட அவர் ஏழு ஜென்மங்கள் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

poonam pandey

ஆனால் திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் கோவாவுக்கு புறப்பட்டு சென்ற அவர் தனது கணவர்  தன்னை பலாத்காரம் செய்து, தாக்கி கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் கோவா போலீசார்கள் சாம் பாம்பே மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே பூனம் பாண்டே தனது கணவருடன் மீண்டும் சமாதானமாகிவிட்டார். இதுகுறித்து அவர், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கிறோம். எங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டன. எந்த குடும்பத்தில்தான் சண்டை சச்சரவு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.