சினிமா

முட்டாள் கொரோனா.. பாதிக்கப்பட்ட தளபதி 65 படநாயகியின் தற்போதைய நிலை என்ன? வெளியான முக்கிய தகவல்!!

Summary:

தமிழ் சினிமாவில்  முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமு

தமிழ் சினிமாவில்  முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதனைத் தொடர்ந்து பூஜா தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் பல பிரபலங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

 இந்த நிலையில் பூஜா ஹெக்டே தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்தநிலையில் அண்மையில் பூஜா ஹெக்டேவிற்கு கொரோனோ தொற்று ஏற்பட்டதாகவும், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் நன்றி. நான் நன்றாக குணமடைந்துவிட்டேன். முட்டாள் கொரோனாவை நான் எட்டி உதைத்து விட்டேன். பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.

 


Advertisement