இதுவரை எந்தவொரு ஹீரோயினும் இந்த மாதிரியான கேரக்டரில் நடிச்சதில்லை! பெருமிதத்தில் தளபதி 65 பட நடிகை!!



pooja-hegde-acted-different-role-in-telungu-movie

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பூஜா ஹெக்டே தெலுங்கில் நடிகர் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் மற்றும் அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

Pooja hegde

இந்த மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே எந்த கதாநாயகிகளும் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது இப்படத்தில் அவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியராக நடித்துள்ளதாக கூறியுள்ளார்.