வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2.. நோ சொன்ன சிவா! ஆனா இயக்குனர் என்ன சொல்லியுள்ளார் பார்த்தீர்களா!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2.. நோ சொன்ன சிவா! ஆனா இயக்குனர் என்ன சொல்லியுள்ளார் பார்த்தீர்களா!!


ponram-tweet-about-varutthapadatha-valipar-sangam-part

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் முழுவதும் காமெடி நிறைந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.

மேலும் காமெடி நடிகராக, சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி கலக்கியிருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து செம ஹிட்டானது. இந்நிலையில் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக மாறிய வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம் வருமா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு சிவகார்த்திகேயன், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் செம ஜாலியாக எடுக்கப்பட்ட படம். இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்,'வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 வருவது உறுதி, சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி (maturity) ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய' என்று பதில் கொடுத்துள்ளார்.