அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அட.. இவருக்குத்தான் அதிக சம்பளமா??

அடேங்கப்பா..பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அட.. இவருக்குத்தான் அதிக சம்பளமா??


ponniyin-selvan-move-cast-salary

பல போராட்டங்கள் மற்றும் தடைகளைக் கடந்து மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதனை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து  தயாரித்துள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அதனால் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற தகவல் பரவி வருகிறது. அதாவது
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த  விக்ரமுக்கு அதிக சம்பளமாக 12 கோடி, நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்து நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

 ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவிக்கு ரூ.8 கோடி சம்பளம், வந்தியத்தேவனாக  நடித்த நடிகர் கார்த்திக்கு 5 கோடி சம்பளம், குந்தவை ரோலில் நடித்த த்ரிஷாவுக்கு ரூ.2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுந்தரசோழன் கேரக்டரில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒரு கோடி என்றும் பூங்குழலியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ரூ.1.5 கோடி என்றும் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.