பொங்கலுக்கு விஜய் டிவியில் கடந்த 4 மாதத்தில் வெளியான 4 படங்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் தொலைக்காடசியான விஜய் டிவியில் கடந்த 4 மாதங்களில் வெளியான 4 புதிய திரைப்படங்கள் திரையிட உள்ளன.
விழா நாட்கள் என்றாலே இப்போதெல்லாம் எந்த தொலைக்காட்சியில் என்ன சிறப்பு நிகழ்ச்சி, என்ன திரைப்படம் திரையிடப்படும் என்ற ஆர்வம் அனைவர் மத்தியிலும் உருவாக தொடங்கிவிட்டது. இன்றைய சமுதாயம் தொலைக்காட்சி முன்பே விழாக்களை கொண்டாட பழகிவிட்டன.
இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய படங்களை திரையிடுகிறது. கடந்த தீபாவளிக்கு சன் டிவியில் 96 திரைப்படம் வெளிவந்து 33 நாட்களில் திரையிடப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது.
இந்நிலையில் பொங்கல் தினத்தன்றும், மாட்டுப் பொங்கல் தினத்தன்றும் (ஜனவரி 15, 16) 4 புத்தம் புதிய படங்களை திரையிடுகிறது விஜய் டிவி. இந்தப்படங்கள் அனைத்தும் கடந்த 4 மாதத்திற்குள் வெளிவந்தவை.
செக்கச் சிவந்த வானம், வடசென்னை, சாமி இரண்டாம் பாகம், பரியேறும் பெருமாள் ஆகிய 4 படங்களையும் ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் என பகல் நேரத்தில் ஒன்றும், மாலை நேரத்தில் ஒன்றுமாக விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது.