
police investigate with meera midhun in bigboss
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது ஓங்கியொலிக்கும் பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த போட்டியாளரான வனிதா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் கடந்த வாரம் மோகன் வைத்யா குறைவான வாக்குகளை பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது 13 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிவருகின்றனர். இதில் ஒருவர் மிஸ். இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த இவர் தற்போது பிக்பாஸ் வீட்டினுள்ளும் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் செட் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில்,மீரா மிதுன் மிஸ் தமிழ்நாடு 2019 நடத்துவதாக கூறி, பலரிடம் பணம் பெற்றுகொண்டு மோசடி செய்துவிட்டதாக எழுந்த புகாரின்பேரில் அவரிடம் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement