பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியைக்காக மாணவன் செய்த காரியம்! வைரலாகும் செய்தி!
பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியைக்காக மாணவன் செய்த காரியம்! வைரலாகும் செய்தி!

நாம் படித்து முடித்து எவ்வளவு பெரிய ஆளாக மாறியிருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் நம்மால் மறக்க முடியாதவர்கள் நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்த பள்ளி ஆசிரியர்கள்தான். அதிலும், தொடக்க வயது ஆசிரியர்கள் என்றால் நிச்சயம் யாராலும் மறக்க முடியாது.
அந்த வகையில் சிறு வயதில் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியையை டெல்லியை சேர்ந்த விமானி விமானத்தில் அழைத்து சென்று அவரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ள சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டில்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின என்ற விமானி தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டில்லியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றபோது அங்கு கற்பித்த ஆசிரியையை டில்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
சுதா சத்யன் என்ற அந்த ஆசிரியை ஆனந்த கண்ணீருடன் தனது மாணவனான விமானி ரோகனை கட்டித் தழுவினார். இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது.