ரஜினியின் பேட்ட படத்திற்கு தணிக்கைக்குழு என்ன சான்றிதழ் வழங்கியுள்ளது தெரியுமா?

ரஜினியின் பேட்ட படத்திற்கு தணிக்கைக்குழு என்ன சான்றிதழ் வழங்கியுள்ளது தெரியுமா?


petta recieved certificate from censor board

ரஜினியின் பேட்ட படத்தின் தணிக்கைகள் முடிவடைந்து விட்டன. தணிக்கை குழு அளித்துள்ள சான்றிதழை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’.இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம்  பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

petta

இந்நிலையில் `பேட்ட' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியானது. மேலும் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு படத்திற்கு விளம்பரம் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். 

இதனைத்தொடர்ந்து பேட்ட படத்தினை தணிக்கை முழுவதும் பார்த்து சான்றிதழ் வழங்கியுள்ளது. தனிக்குழு பேட்ட படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.