சினிமா

இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த நடிகர் சிவா! அதிர்ச்சியில் திரையுலகம்!

Summary:

Payapulla actor siva escaped with young girl

பயபுள்ள என்ற படத்தில் நடித்துவந்த புதுமுக நடிகர் சிவா என்பவர் தனது வீட்டின் அருகில் தங்கியிருந்த பட்டதாரி பெண் ஒருவரை மயக்கி அவருடன் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பயபுள்ள என்ற படத்தில் நடித்தவர் சிவா. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை பூர்விகமாக கொண்ட இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளார். முதலில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது பயபுள்ள என்ற படத்தில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

படங்களில் நடித்துவந்த இவர் தனது வீட்டின் அருகில் இருந்த பட்டதாரி பெண்ணிடம், தான் ஒரு பிரபலம் என்றும், பல்வேறு பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் காட்டி அந்த பெண்ணை மயக்கியுள்ளார்.

இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று அந்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்துள்ளார் நடிகர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையின் முதல் கட்டத்தில் தான் மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறித்தான் அந்த பெண்ணை காதலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Advertisement