சினிமா

கணவர் மறைவிற்குப் பின், நடிகை பவானி ரெட்டியின் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்ததா! உண்மையை உடைத்த சகோதரி!!

Summary:

கணவர் மறைவிற்குப் பின், அவரது நண்பருடன் காதல்! இரண்டாவது திருமணம் செய்தாரா பவானி ரெட்டி! உண்மையை உடைத்த சகோதரி!!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் சன் டிவியில் ராசாத்தி என்ற தொடரில் நடித்து வந்தார். பின்னர் சில காரணங்களால் பாதியிலேயே அதிலிருந்து விலகினார்.

நடிகை பவானி ரெட்டி கடந்த 2017 ஆம் ஆண்டு,பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் சில பிரச்சனைகள் வரவே பிரதீப், திருமணமான எட்டு மாதத்திலேயே, தற்கொலை செய்துக்கொண்டார். பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில்  அண்மையில் டாஸ்க் ஒன்றில் அவர் தனது கணவரது இறப்பு குறித்தும், அதிலிருந்து தான் மீளாத்துயரில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் அவர் கணவர் இறந்த பிறகு பவானி இரண்டாவதாக அவரது கணவரின் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அது குறித்து அவர் ஏன் எதுவும் கூறவில்லை எனவும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் பவானி ரெட்டியின் சகோதரி சிந்து, பவானி அவரது கணவர் மறைவுக்கு பின் வேறு ஒருவரை விரும்பினார். குடும்பத்தினரும் அவருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர விரும்பி அவளது விருப்பப்படி திருமணம் செய்து வைக்க எண்ணினர்.

ஆனால் சில காரணங்களால் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்துவிட்டனர். பின்னர் அவள் மிகவும் தைரியமாகவும்,  கண்ணியமாகவும் வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரது இந்த புதிய பயணத்தில் உங்கள் ஆதரவு அவளுக்கு வேண்டுமென தெரிவித்துள்ளார்.
 


Advertisement