இந்த சின்ன குழந்தை தனுஷ் படம் நடிகையா.! வைரலாகும் புகைப்படம்.?Parvathy Childhood photos

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பார்வதி திருவோடு. இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமை கொண்டவர் பார்வதி.

parvathy

இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார். இவர் தமிழில் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு வெளியான 'பூ' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் பெருதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன், பெங்களூரு நாட்கள், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

parvathy

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தங்கலான்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பார்வதியின் சமூக வலைத்தள பக்கத்தில் அவரது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.