
Pandiyan stores mullai kathir video
விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஓன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தொடரின் வெற்றிக்கு முக்கியமானவர்களில் இருவர் முல்லை (சித்ரா) - கதிர் (குமரன் ).
முதலில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டது, ஆனால் இது வதந்தி என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் முல்லை - கதிர் இருவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை என்றும், இருவரும் சரியாக பேசிக்கொள்வதில்லை, இருவரில் ஒருவர் விரைவில் தொடரை விட்டு விளக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இதுகுறித்து இருவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோவில் காலம் மாறும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். இப்போது காலம் மாறியுள்ளது. நீங்க நினைப்பது மாதிரியோ, வெளியில் பேசிக்கொள்வது மாதிரியோ பெரிய பிரச்னைகள் எதுவும் கிடையாது.
நண்பர்களுக்குள் வரும் சிறு சிறு பிரச்னைகள் தான். சில நேரங்களில் சில மனிதர்களுக்கு கோபம் வருவது சகஜம் தான். அதனால் கதை கட்டுபவர்களை நீங்கள் நம்ப வேண்டாம். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று இருவரும் பேசியுள்ளன்னர்.
Advertisement
Advertisement